என்ன வாழ்க்கை இது

"அண்ணார்ந்து பார்த்தா

என் நாட்டு விமானம்

ஏத்திட்டு போகுமா தெரில

ஏமாத்திட்டு போச்சு!!

ஏழு கடல் தாண்டி வந்துட்டோம்

எட்டாத பாசத்துக்கு"

ஓயாத வெயில்

நிழலுக்கு பாலைவனம்!

இதாங்க எங்க வாழ்க்கை

"கத்தி படத்திற்கு கை தட்டல்

கத்தி கத்தி பாக்குறோம்

கை கொடுக்க யாரும் இல்ல!"

"நாட்டுல 500 கோடி ஊழல்

இங்க 50 ரியாலுக்கு வழி இல்ல!"

"ஒட்டகமே இளைச்சு போச்சு

ஒட்டாத மனம் ஏமாந்து போச்சு"

"என் மனைவி

முகம் பார்க்க ஏங்கும்

skype காதல் "

"என் பையன் விரல் சுப்புகிறான்

whatsapp இல்"

"தொட்டு பார்த்தாலும்

தொட முடியாத தூரத்தில்"

"என்னபா நல்ல இருக்கியா ?

சோகமான தாய் குரல் "

சந்தோஷமா பொய் சொல்லுறேன்

நல்ல வாழ்க்கை என்று "

வாங்கினது கடன்

வட்டியா போகுது என் ரத்தம் !

கஞ்சியோ கைப்பிடி சோறோ

காணமா போச்சு என் பசி !

4 வார விடுப்புல நாட்டுக்கு போறேன்

"வாங்க மாமா"

என் அன்பு மகனின் செல்லகுரல்

வலிச்சாலும்

"அப்பாடா நான் " சொல்ல தோனல!!

"கட்டிபிடிச்சா மனைவி

கண்ணீரா போச்சு என் உசுரு"

மீண்டும் அண்ணார்ந்து பார்த்தேன்

மீண்டும் என் நாட்டு விமானம்

ஏத்திட்டு போல

இறக்கிட்டு போச்சு ""

"அக்கறைக்கு என் சட்டை கரையும்

இக்கரைக்கு என் ரத்த கரையும் தான் பச்சை "


-அன்புடன்

அன்பு மனிதன்

எழுதியவர் : அன்பு மனிதன் (1-Dec-14, 3:42 am)
சேர்த்தது : anbu manithan
பார்வை : 236

மேலே