கண்ணீர்---அஹமது அலி ----

கரித்தாலும்
இனிக்குமே
ஆனந்தக் கண்ணீர்.!

வலித்தாலும்
வெற்றிப் பாடம் சொல்லுமே
தோல்விக் கண்ணீர்.!

தொடர்ந்து சொரிந்தாலும்
சாதிக்கத் தூண்டுமே
சோதனைக் கண்ணீர்.!

பீரிட்டுப் பொங்கினாலும்
பிரியாத அன்பை வளர்க்குமே
பிரிவுக் கண்ணீர்.!

இழப்பை சந்தித்தாலும்
இந்த உலகம் புரிய வைக்குமே
இறப்புக் கண்ணீர்.!

சிலிர்ப்பிலே சிந்தினாலும்
மனச் சிக்கலெடுக்குமே
சிரிப்புக் கண்ணீர்.!

நம்மையும்
நல்ல மனிதன் என்று சொல்லுமே
இரக்கக் கண்ணீர்.!

எழுதியவர் : அஹமது அலி (1-Dec-14, 11:37 am)
பார்வை : 402

மேலே