மையல்

பரிச்சயமில்லாத
என் தேகத்தின்
பிரதேசங்களிலும் கூட
உன் இதழின் ஆயிரம் ஆயிரம்
முத்தங்கள்

மாயம் செய்கிறாய் நீ?
உனக்கென விரித்த வலையில்
நான்........!

ஆசை தூண்ட
உன்னை தீண்ட
சிவக்கிறது உன் தேகம் ............,

காதுகளில் உன்
சங்கீத முனகல்கள்
என் இரவுகளை
நிம்மதி இழக்க
செய்கிறது ................,
என்னிலிருந்து
உன்னை பிரிக்கும்
உபாயங்கள் பலனலிப்பதில்லை




என்.மேல் உன்னை " மையல் "
கொள்ள வைத்தது எதுவோ ?
"கொசுவே" நீ சொல்
..
.

எழுதியவர் : haathim (1-Dec-14, 7:23 am)
Tanglish : maiyal
பார்வை : 342

மேலே