பெண்களே அவதானம்

பெண்களே அவதானம் ..........

காமத்தால் வரும் காதல் கடைசிவரை நில்லாது !
அந்தக்காதலுக்கோ கவிதைகள் ஏராளம் ஏராளம் !
காதல் என்றால் என்னவென்று தெரியாமல் விழும் !
பெண்களோ ஆயிரம் ஆயிரம்………..
காமம் என்ற காதலில் காமுகன் காமக்காதல்
வென்றுவிட்டால்……..
கடைசியில் பிள்ளையுடன் தத்தளிப்பது பெண்களே !
காதல் என்றால் உன்மேல் கை வைத்தால்
அது காமக்காதல் என்று புரிந்து கொள் !
அப்போதே நீ விலகிக்கொள்…………
காதல் என்றால் முதலில் புரிந்து நடப்பது
பெண்களுக்கே அவசியம்………
ஏனெனில் சேறு கண்ட இடத்தில் கால் வைத்து
தண்ணீர் உள்ள இடத்தில் கழுவுவது ஆண்களே !
பொதி ஏற்றியவனை விட பொதி சுமப்பவளே
அதிகம் சிந்திக்க வேண்டும்……..

கவிஞர் கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (2-Dec-14, 3:59 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 157

மேலே