நேற்று இன்று நாளை
தொலைந்து போன
நேற்றுக்களை
இன்று தேடுகின்றேன்-
கிடைக்குமா நாளையாவது?
நேற்றொடு
தோற்றுப்போய்விட்டு
களைத்து உறங்கும் நான்-
என் கனவில் இன்றோடு
போராடும் கதாநாயகன்
நாளை பிறக்குமுன்
கலைந்துவிடும்
இன்றைய கனவுகள்-
ஆனாலும் நாளைய
கனவுகளிலும்
நான் நேற்றுக்களைத்தான்
காண போராடுவேன்
நேற்று-இன்று-நாளை-
வாழ்க்கை நாயகனின்
மூன்று நாயகிகள்-
இறந்து போனவள்
இனிமையானவள்-
நாளை எனும்
சிங்காரியை
நாடும் அவனுக்கு
இன்றெனும் இல்லாள்
இனிப்பதில்லை-
இன்று இறந்துப்போனபின்
நாளை நொந்து கொள்வான்