காவல் தேசம்
என் தேசம் இது -இன்னும்
என் நேசம் என் மக்கள்
தேசத்தின் எல்லைக்கோடு
என் மரணத்தின் விலை
என் மக்களின் உறக்கம் -என்
காவல் இரவெல்லாம் விழிப்புடன்
எல்லையில் அந்நிய துருப்புக்கள்
என் உயிரை மீறிதான் உடுருவும்
எத்துனை துன்பங்களையும்
தாங்கும் என் உடல் மக்களுக்காக
மரணம் முத்தமிடும் நேரம் - இனி
பயமறியாத உரமேறிய நெஞ்சம்
வாழும் வரை எல்லையில் பாதுகாப்பு
வீழ்ந்து விட்டால் வீர வணக்க அஞ்சலி !
குறிப்பு : நம் தாய் நாட்டுக்காக எல்லையில்
உயிர் துறந்த நம் ராணுவ ஜவான்களுக்கு
சமர்பணம் !
ஸ்ரீவை.காதர்