ஏன் அப்பா எனக்கு மட்டும்

இயற்கை செய்த கோலம்
இவன் குழந்தை பிணியில்!
தொடர் படுக்கை
கட்டிலே உலகம்!

என்ன தவறு செய்தாள் !
என் பிள்ளை இந்நிலைக்கு!
அவளொத்த பிள்ளைகள்
ஆடல் பாடல் காண
இறக்கின்றேன் தினந்தோரும் !

ஊமையாய் அழும் மனைவி
முகம் காட்டும் சோகங்கள்
யார் குற்றம்?
நானா? அவளா...?

உறவுக்குள் மணம் முடித்து
உணர்வுகள் வௌிப்படுத்த
உறவினர் போட்ட கோலம்
பாவம் குழந்தை என்ன செய்யும்
உயிர் இருந்தும் அசைவற்றுக் கிடக்கிறாள்

பல இறவு தூக்கமில்லை
மனைவி முகம் காண
கலங்குகிறேன்
வேறு என் செய்வேன்

வாய் விட்டுச் சிரித்து
கன காலம்
ஒன்றாய் பயணித்தது கூட
நினைவில்லை
ஏன் இத்தண்டனை

இறைவனை நினைக்காத நேரமில்லை
யாருடனும் பகையுமில்லை
ஏழை முகம் கண்டு
இரங்காத நேரமில்லை
இருந்தும் ஏன் இந்தச் சோதனை

மனம் கனத்து
ஏக்கமாய் முகம் பார்த்து
ஏன் அப்பா எனக்கு மட்டும்
என்று கேட்பது போல்
அவள் உளம் அழும் ஓசை
எனக்கு மட்டும் கேட்கிறது

பிறப்பு முதல் இறப்புவரை
ஏற்ற இறக்கம்
இன்பம் துன்பம்
மாறி மாறி வருவதுண்டு
இவள் மட்டும்
என்ன செய்தாள்
தொடர் சோகம் காண்பதற்கு

விரிந்த உலகத்து வாழ்க்கை
இவளுக்கில்லை
சின்னஞ்சிறு அறைக்குள்ளே
சிறைபட்டவளாய் வாழ்வதற்கு
தவறு என்ன செய்தாள்
நீதியே விடை பகர்வாய்

அதிசயமாய் எழுந்து வந்து
ஆடிப்பாடி விளையாடும்
காட்சி கூட கனவில் இல்லை
இறைவா! என் குழந்தை
விடிவுக்காய் அழுகிறேன்
முகம் பார்ப்பாய்
ஏங்குகிறேன் நாள் முழுதும்!!!!!!!

(நோயுற்றிருக்கும் மகளுக்காய் தந்தை)

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (2-Dec-14, 4:06 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 224

மேலே