விதுவுக்கு வாசம் வீசட்டும்
நீல திரைசீலை நடுவினிலே
நீண்டிருக்கும் கரையினிலே
ஆனந்தமான நினைவினிலே
அழகாய் பிறந்தால் எந்தங்கை
வலைவினிலே கண் மறைத்து
மலையரசி மகளென மறந்து
மனமெல்லாம் உன்நினைவு சுமந்து
அடர்ந்திருக்கும் வனமாக நான்
முளையில் துளிர்விட்டாய்
எழுந்தும் நீ நின்றாய்
வளர்ந்தும் மழலையாய்
கள்ளச் சிரிப்பினிலே
உள்ளத்தை கொள்ளை கொண்டாய்
இன்று நீ பிறந்தாய்
இயற்கை நாணமுடன் இணைந்தாய்
இல்லத்தின் மகிழ்வாகி இசைந்தாய்
இன்புற்று என்றென்றும் வாழ்க நீயே !
குறிப்பு :தங்கை விதுவின் பிறந்த நாள் வாழ்த்து