முந்திரிக்காடு 4

பா ங்..... பான்......சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....வந்து நின்றது முத்தாயீ ஆயா வீட்டில் ..

சத்தம் கேட்டு வாசலைப் பாத்து...ஆ யா ...குனிந்து குனிந்து நிமிர முடியாமல் நிமிர்ந்து ...விரல்களை நெற்றிப் பொட்டில் வைத்து பாக்க கண்ணும் புரியாமல் மங்கிய ஒளியில் ..புரியாமல் வந்த உருவத்தைக் கேட்டாள்..

யாருப்பா பெலசர்கார்ல வந்து இறங்குறது ....கதவைத் தொறந்து கொண்டு வந்தார் 25 வயது ஒரு இளைஞன் ..
நான்தான் கிராண்ட்மா ...சாரி ஆயா

நாந்தான்னா யாருப்பா எனக்கு கண்ணும் புரில ஒரு மண்ணும் புரில பா ...

நாதான் ரெட்சன்

என்னப்பா புரில பேரு ...ஒன பேரு வாய்க்குள்ள நுழைல ..யாரு தம்பி .புதிர் போடாத

என்னத் தெரிலயா பாட்டி நான்தான் செஞ்சூரியன்...அத்தான் ரெட்சன் வச்சிருக்கேன் ..நா சென்னைல டாக்டர் படிப்பு படிச்சிட்டு ஒரு hospital ல வேல பாக்றேன்

அட நம்ம சூரி தம்பியா...சின்ன புள்ளைல பத்தாது ...எப்டிப்பா ருக்க ..அப்பா அம்மா நல்லருக்காகளா...அப்பா அம்மா கூட்டியரலையா....?

நா மட்டும்தான் வந்தேன் ஆயா ... தாத்தா எங்க ஆயா ..
அவுக ஏரிக்கு குளிக்கப் போய்க்காக தம்பி ..வருவாக தம்பி ..

வா பா காப்பி தண்ணி ஒரு வா குடி ...
காப்பிய குடித்தபடியே ....இங்க ஊர்ல எல்லோரும் நல்லருக்கன்களா ஆயா ....அப்பா வீட்ட பாக்க வந்தேன் ..அப்டியே நம்ம ஊரையும் சுத்திப் பாக்கலாம்னு ....

சரி தம்பி ....இந்தா சின்னான்..இங்க வா ....தம்பியோட போய்... வூட்ட சுத்திக் காட்டு.... சாவிய வாங்கிட்டு போ...அப்டியே தம்பிக்கு என்ன வேணுமின்னு கேட்டு ...ஏதாது ஒதவி பண்ணு....

அவர்கள் போனதும் ...தாத்தா வந்தார்.

யாரு புள்ள போறது பெலசர் கார்ல போறது நம்ம சின்னானும் ருக்கான்...

நம்ம மருத்துவரய்யா மவன் ராசா இங்க வந்துட்டு போவுது தொ வாரேன்னு அவுக வீட்டுக்கு பாக்க போய்க்கு...

சரி ஊர்ல ருந்து நம்ம மவ பெத்து செல்லாயீ வருத்தம் புள்ள படிச்சு முடிசுட்டாம் ...நம்மள பாக்க வராக...

....தொடரும்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (2-Dec-14, 2:08 pm)
பார்வை : 98

மேலே