முந்திரிக் காடு 3
![](https://eluthu.com/images/loading.gif)
வாங்க ஐய்யா ...சுலுவ ....
வெயிலு போய் ரவிக்குள்ள ஊடு போய் சேர்நும் புள்ள ....வயத்தைக் கிள்ளுது ...தாத்தாவின் தழு தழுத்தக் குரல் .
மேகக் கூட்டங்கள் நீலவானத்தை தொடும் வேளையில்.... ஆதவன் மறையும் மாலை நேரத்தில்...பறவைகள் தன் கூடுக்குள் மறையும் நேரத்தில் ....பகலை உண்ட மயக்கத்தில்.... இருளைத் தேடும் நட்சத்திரக் கூட்டங்கள் மின்னி மின்னி அழைத்தன வெண்ணிலாவை .....
ஒவ்வொரு கூரை ஒட்டு வீடுகளிலும் ஒவ்வொரு மின்மினிப் பூசிகள் கண் சிமிட்ட ...ராவானது ஊரும் ....
எ புள்ள அந்த அரிக்கன் விளக்க எடுத்தா ....சின்ன ராசுத் தாத்தா...
தொ வாறே ராசா ...இந்தா பசியோட இருப்ப.. கம்பு தோச...சூடா ருக்கு ருசிக்க ஊறுகா ருக்கு ...சாப்டு ராசா .....முத்தாயி ஆயா....
சாப்டு முடிந்ததும் ....வர காப்பி குடிய்யா.... வயிறு செரிக்கும் ..
ம்ம்... போதும் புள்ள ...
எங்கேயோ ஒரு குரல் ராகமாக ஆயா தாத்தாவின் காதுகளில்....
மயிலிறகால உனக்கொரு சேதி சொல்லயில சொல்லயில
சேத்துக் குழச்ச சந்தனமா மணக்கையில மணக்கையில
சேராம சேத்து வச்ச நந்தவனம போகயில போகயில
நா மட்டும் தனியா தவிக்கயில தவிக்கயில
உன் வாசம் சொக்க மனம் சொந்தமனம் சாவதில்ல.... ........தாத்தா தங்கை செல்லாயீ யின் பாடல் ...
அதைக் கேட்ட தாத்தாவின் கண்களில் கண்ணீர் பொல பொலன்னு....
அய்யா...ராசா அழாதய்யா..அழாத் ..... உன் தங்கச்சி போனத் நினச்சு இன்னும் மறக்காம.... நீ படுறதும் வேகுறதும் புரிது ராசா ....அத மறக்காம ..இர்க்க முடில ....அஆங் ஆங் ...ஆயாவும் அழுகிறார்....
என்னதான் நடந்தது ....தாத்தாவுக்கு.....காண்போம் அடுத்த காட்டில் ...