முந்திரிக் காடு 5
ஆயா ...ஆயா...
யாரு கூப்டறது ?கடுதாசிக்காரரா ....இன்னா ர்டேர்ந்து கடுதாசி வந்துற்கு ..
ஆயா மதராசப் பட்டனத்ல்ருந்து வந்துருக்கு ஆயா ...உங்க மவ வயித்து புள்ள உங்க பேத்தி வாராகளாம்
அப்டியா...ஐய்யா ..இங்க வாங்கய்யா....நம்ம மவ பவானி பேத்தி தேன்மொழி வரா லாம் பா
சந்தோசத்தில் ஐய்யா ...துள்ளி ஓடுறார்....
பாருய்யா கிழவன் துள்ளிஓடுரத..என்னா சந்தோசம் ....
ஏ... சின்னான் எங்கடா போன ? சந்தைக்கு போவனும் நம்ம மவ பேத்தி வரா வா வண்டிய கட்டு ....
தொ வர்ரெங்கய்யா..
கொஞ்ச நேரத்தில் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு கார் ஆயா வீட்டு முன் வந்தது....
ஆயா வெளிய வந்து பார்த்து....யாரு ...ப்ளசர் கார்ல வாறது ...
கதவைத் தொறந்து 25 வயசு இளைஞன் இறங்கினான்...கிராண்ட்மா.... சர்ரி ....ஆயா என்னத் தெரியலையா....நான்தான் ரெட்சன் ...அவ்வவ் உதட்டைக் கடித்துவிட்டு ...சொன்னான் ...
யாருன்னு தெர்லயே பா பேரும் புரில ...கண்ணும் புரில.... ஒரு மண்ணும் புரில ...
அதுக்குள்ள அங்க வந்த சின்னான் ..ஆயா நம்ம மருத்துவரய்யா...செர்ரியன் மவன் ...டாக்டர்க்கு படிச்சுட்டு பட்டனத்ள இருக்கால..அவருதா ஆயா ..
இபோ புரிது ...வா ராசா எம்புட்டு வளந்த்ருக்க அடையாளமே தெர்ல ...உங்க அப்பன மேரி இருக்க ....ஐய்யா வாய்யா யாறு வந்துருக்கா பாரய்யா....
வாட..ல எப்போ..ல வந்த...அப்பா அம்மா நல்லாருக்காகளா.....காப்பி தண்ணி குடு புள்ள ...
என்ன பண்ற பா.... என்னா படிக்கிற..... பேரு மறந்துட்டல்ல ......என்ன .பேரு ...
தாத்தா எப்டி இருக்கீங்க ..ஆயா எப்டி இருக்காங்க...நா ரெட்சன் ...செஞ்சூரியன் நு அப்பா வச்ச பேர் ..ரெட்சன் நு சொல்வாங்க ....நா டாக்டர் படிப்பு படிச்சுட்டு அங்க ஒரு கவர்மெண்ட் hospitalla வேல பாக்றேன் நா ஊரப் பாத்து.....நம்ம சொந்தங்கலப் பாத்து .....ரொம்ப நாளாச்சு தாத்தா ....அதான் வந்தேன்... உங்களையும் பாத்துட்டு போலாம்னு...
சரிப்பா காப்பி குடிச்சதும் உங்க அய்யா வூட்டுக்கு போலாம்ல ...ஏலே சின்னான் இங்க வாலே...சூரிய கூட்டிட்டு போய் அவங்க வீட்ட காட்டு... ஊற சுத்திக் காட்டிட்டு வா... நா வண்டிகட்டிட்டு சந்தைக்கு போறேன்..
சர்ர்ர்ர்ரென்று காரும் சென்றது சின்னானயும் சேர்த்துக் கொண்டு...
ஒரு வாரம் கழிந்தது....
ஊரிலிருந்து தாத்தா மவ பவானியும் பேத்தி தேன் மொழியும் காரில் வந்து சேர்ந்தார்கள் ..
முந்திரித் தோப்பினருகில் உள்ள கோவில் அருகில் சின்னானும் டாக்டர் செஞ்சுரியனும் பேசிக் கொள்கின்றனர்...
இந்த கோவில எப்போ திறப்பாங்க ?... டாக்டர் ஆவலில் கேட்டார்
வர பவுர்ணமிக்கு தாத்தா கொவில திறந்துதான் நா பாத்ருக்கேன்... மற்ற எல்லா நாலு கெழமையும் கிடையாது டாக்டரய்யா....
அப்டி என்னதான் இங்க இருக்கு ...நா பாக்கணுமே...
அதெல்லாம் பாக்க முடியாது டாக்டரய்யா...அது ஒரு கதை ....
என்னது சொல்லுப்பா ....நானும் கேக்கணும் ஆசையா இருக்கு....
சரி சொல்றேன் டாக்டரய்யா .....சொல்லத் தொடங்கினார்...
...................................................அடுத்த காட்டில் பாப்போம்