மருதாணியும் மணப்பெண்ணும்-சகி

@@மருதாணி @@

***மங்கையவள் கைகள் ***
....அழகு ....

தன் மனதில் உள்ள
மணவாளனை எண்ணி
உள்ளங்கை சிவக்க
மருதாணி வைத்துகொள்கிறாள்...

மருதாணிக்கும் பொறமை
இவள் மன்னன் மீது கொண்ட
காதலை எண்ணி...

மனம் முடிக்க மன(ண)மேடை
ஏறும் முன்னே தன்னவன்
மீது கொண்ட அன்பை
சொல்லிவிடுகிறாள்...

தன்னை சூழ்ந்து நின்ற
தோழிகளும் பொறமை
கொண்டதையும் உணர்கிறாள் ...

தன் கைகளில்
சிவந்த மருதாணியின் அழகை எண்ணி ...

கைகளின் அழகில் மன்னவனும்
மயக்க வெட்கத்தில் -அவள்
முகம் சிவக்கிறாள் ....

தன்னையும் மறந்து
தன் மருதாணி விரல்களை
ரசிக்கிறாள்....

மன்னவனை அணைத்து
முத்தமிடுகிறாள்- அவள்
கைகளுக்கு ....

மனதை கொள்ளைக்கொண்ட
தன் காதல் கணவனை
திருட்டுத்தனமாக ரசிக்கிறாள் ...

காதல் கணவனும்
ரசிக்கிறான் அவள் அழகை...

அவளுக்கே தெரியாமல்
அவள் மருதாணி அழகையும் ....

இருமனங்களையும் இணைக்கிறது
மன(ண)ம் கொண்ட மருதாணி....


(என் கைகளில் சிவந்த
மருதாணியில் என் மன்னவனை எண்ணி )

எழுதியவர் : சகிமுதல்பூ (2-Dec-14, 5:51 pm)
பார்வை : 286

மேலே