வாட்ஸ் அப்
"பக்கத்து வீட்டுல அவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆகுது...அதுக்குள்ள அவுங்களுக்குள்ள என்ன பிரச்சனை?அந்தம்மா பெட்டி படுக்கையோட கிளம்பிடுச்சு..?
"அந்தம்மா முதல்முதலா தன் கையால சமைச்சு புருசனுக்கு மதியச்சாப்பாடு அனுப்பியிருக்கா.... அது எப்படி இருக்குன்னு "வாட்ஸ்அப்" ல கேட்டதுக்கு...அவரும் தமிங்லீஷ்ல "அருமை...அருமை..." ன்னு சந்தோசமா பதில் அனுப்பி இருக்காரு.... அத இந்தம்மா... "எருமை...எருமை..."ன்னு தப்பா படிச்சுட்டு... தன்னை திட்டுறதா நினச்சுட்டு கோபப்பட்டு கிளம்பிடுச்சு...."