ஒரு நடிகை ஓட விட்டாள் பழமை நினைவுகளை
கறுப்பு வெள்ளைப் படம்
எடுத்தான் கற்பனைக்கு
ஏற்றால் போல் என்னை
வளைத்தான்..............
துள்ளிக் குதிக்கும் வயதில்
அள்ளிச்சேலைசொருக
வைத்தான்........
அழுது பழக்கம் இல்லை
ஐயா அம்மா என்று அலற
வைத்தான்..........
உதட்டுச்சாயம் பூசியது இல்லை
உடல் எங்கும் சாயத்தால்
முழ்க வைத்தான்................
வெளிப்பான என்னை கருமையான
பெண்ணாக மாற்றி பார்ப்போர்
முகம் சுழிக்க வைத்தான்.............
பதினாறு வயது பருவ மங்கை
என்னை பாட்டியாட்டம் நடுங்கி
நடுங்கி நடக்க விட்டான்...............,
தந்தை பாதம் தொட்டது இல்லை
கண்டவன் காலில் விழ விட்டான்......
தாய்க்குப் பணி செய்தது இல்லை
பணத்துக்காக யாரோ ஒருத்தியின்
வாந்தி அள்ள வைத்தான்..........
ஆட்டம் என்னும் பெயரில்
முகம் அறியாஆடவன் கை
அங்கமெல்லாம் தடவ நான்
விட்டுவிட வேண்டும் என்று
கட்டளை இட்டான்.........
கட்டில் வரை கொண்டு விட்டான்
கூடவே ஒளி பதிப்பையும் பலபேர்
கண்யைும் நோக்க விட்டான்.........
அன்று அறியாத ஒன்று பணம் பணம்
என்பதே குறிக்கோளாக இருந்தது
ஒருத்தன் கையை நிரந்தரமாகப்
பிடித்தேன்............
வார்த்தையால் கொஞ்சம்
வசபாடியே கொஞ்சம்
அடி உதையால் கொஞ்சம்
அவன் வெறுக்கும் போது புரிகிறது
பெண் வாழ்வில் நடிப்பையும்
நிஜமாக எடுத்துக் கொள்ளும்
சமுதாயாம் என்று...........
அன்று அடக்கத்தோடு நடித்த
எனக்கே வசப்பாட்டு இன்று
அரை குறையாக உடுத்தும்
நடிகையின் வாழ்வு என்னாகும்
என்று நினைக்கவே ஐயோ
நினைக்காதே என் மனமே போதும்
நிட்பாட்டு தாங்காது என் உள்ளம்
பவமடி பாவையே நீங்கள்.............