எபோலா

உலகின் உயிர் குடிக்க
அழியாத வரம் வாங்கிவந்து
அழிக்கும் அரக்கன்

ஆபிரிக்க நாடுகளில்
அடி பதித்து சிரிக்கிறான்
அதட்டும் பார்வையினால்
அகிலம் மிரட்டுகிறான்
எபோலா எனும்
வைரஸ் நோயாய்

இந்நோய் எம்தேசம்
நுழைய எத்தனை நாளாகும்
ஏன் எனில் எங்களின்
சுத்தமும் சுற்றமும்
அப்படி பட்டதே

நரகம் எப்படி இருக்கும் ?
அங்கிருந்து வந்தவனை
கேட்டேன் .சொன்னான்
"நம்ம பொது கழிப்பறைகளை
விட நன்று "என்று .

அரசியல் பிரமுகரும்
சினிமா நட்சத்திரங்களும்
விளக்குமாறு கை கொண்டு
போட்டி போட்டு
போட்டோ போட்டால்
என்ன மாறும் நாறும்
சாக்கடைகள் நமக்கல்லவா
தெரியும்

நம் வீட்டை அண்டை வீதியை
நாம் சுத்தம் பேணுவோம்
நோயற்ற தேசம் காணுவோம்

எழுதியவர் : இணுவை லெனின் (2-Dec-14, 7:56 pm)
பார்வை : 407

மேலே