நானாகிறேன்

சில நேர நினைவோடையில்
சில பயண வாசல்களில்
நின் தருணங்க ளாகிப் போகிறேன் ....

உன் பெயர் மட்டும்
சில இடங்களில் காண்கையில்
நானும் பதாகை களாகிப் போகிறேன் .....

கடலில் மிதக்கும் ஓடம்போல்
எவ்வளவு ஆழமானாலும்
என் இதயம் மட்டும்
மெல்ல மெல்ல மேலெழும்பி

சில நேரங்களில்
நானாகிப் போகிறேன்
நானற்ற நீயாகி ....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (3-Dec-14, 6:06 am)
பார்வை : 113

மேலே