காதல் பூ

காதல் பிரபஞ்சத்திலே சொப்பனக் கூடாரங்கள்
இமையாலே இசையமைத்து இடம்மாறும் தகவல்கள்
மேகம் தூவும் அந்திமழை சாரலில்
கண்ணும் தூவும் காதல்மழை காகிதம்
விழியை விழச்செய்யும் வித்தியாசமான விளையாட்டு
காதல் உலகின் பழங்கால விளையாட்டு
மனதோடு பேசி உடலோடு பேசினால்
நாகரீகம் கூட நாதியற்று போகும்
கருவிழி உரசும் பூக்கள் வரிசையில்
மனதை உரசும் பூவே காதல்பூ

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (3-Dec-14, 7:06 pm)
சேர்த்தது : richard edwin
Tanglish : kaadhal poo
பார்வை : 117

மேலே