என்னுயிர் தோழி

என்னுயிர் தோழி சங்கீதாவுக்கு
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் (chopra )கீர்த்தனா
(04.12.2014)

என்னுயிர் தோழியே
என்னில் நீ ஒரு பாதியே

உன்னுடன் சேர்ந்து செய்த சேட்டைகளும்
சின்ன கோபங்களும் சின்ன சந்தோசங்களும்
எண்ணில் அடங்கா நச்சத்திரங்களைப்போல
இன்னும் மின்னுகின்றது நம் வாழ்க்கையில்

எனை விட்டுக் கொடுக்கா உன் மனமும்
உன்னை விட்டுக் கொடுக்கா என் மனமும்
எப்பொழுதும் நேரிய வழியில் செல்லும் நம் கனவுகளும்
ஒன்றும் வேறு பட்டதும் இல்லை

செய்யும் தவறுகளை திருத்தும் ஒரு ஆசிரியரும் நீதான்
அன்பை தாய் போல காட்டும் தெய்வமும் நீதான்
ஆலோசனை கூறும் தந்தையும் நீதான்

என்னருகில் எப்பொழுதும் இருந்து
இன்பதுன்பங்களில் பங்கெடுக்கும்
என்னுயிரும் நீதான்

என்றென்றும் என்னுடன் நிழல் போல
என் கண்களின் கண்ணின் மணிபோல
என் கண்களில் சிறு துளியும் சிந்த விடாமல்
காக்கும் என் கண் மடலும் நீதான்

எம் நட்பு வாழ்வதைப் போல
என்றும் நீ வாழ என் உள்ளங்கனிந்த
என்னுயிர் தோழிக்கு என் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !

எழுதியவர் : keerthana (3-Dec-14, 7:35 pm)
Tanglish : ennuyir thozhi
பார்வை : 508

மேலே