மனம் ஒரு குரங்காம்

மனம் ஒரு குரங்காம்,அது
ஆட்டி வைக்குமாம் நம்மை,
உணர்வு கூட மறைந்து விடுமாம்,
உண்மை கூட மறந்து விடுமாம்,

சமயத்திற்கு ஏற்ப மாறுமாம்,
ஆளுக்கேற்ற வேடம் போடுமாம்,
சங்கதிகளைப் பேசித் தீர்க்குமாம்,
பேசாவிட்டாலும் உக்கிரம் கொள்ளுமாம்,

பிடித்தவரைத் தூக்கிக் கொண்டாடுமாம்,
பிடிக்காதவரை கீழே தள்ளி மிதித்து விடுமாம்,
நினைத்தால் எங்கு வேணுமானாலும் செல்லுமாம்,
நினைக்க வில்லை என்றால் எதுவும் செய்யாதாம்!

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (3-Dec-14, 10:47 pm)
பார்வை : 73

மேலே