நம் பார்வை

நித்தம் உன் காலையடி
காத்திருக்க செய்தாய் என் கண்களை.
வரும் மாலைப்பொழுது
ஜாடை காட்டி செல்வாய்
நாளைக்கு வருவேனென்று
உன் கண்கள் மொழியில்.
எனக்கு ஓர் தயக்கம்
அதில் இரவில் கனவுகளின் சாம்ராஜ்யம்.
இரவில் தூக்கம் தொலைத்த கண்கள்
காலையில் உன் கண் இணைப்பேச
சில நொடிகள் போதும்.
உனக்கும் என் மன உலச்ச்சல் புரியும்
ஆனாலும் அதை ரசித்தபடி
விரும்பாததுபோல் நடிப்பாய்.
உனக்கும் எனக்கும் எண்ணிலடங்கா ஆசை,
ஆனாலும் ஒருவருக்கொருவர் நேரில் பார்த்த பின்
வார்த்தைகள் மௌனமே எமது காதல் பவிதை.

எழுதியவர் : ரிஷாட் (4-Dec-14, 12:50 pm)
Tanglish : nam parvai
பார்வை : 73

மேலே