பொருளாதார தேடலில்

பொருளாதாரத்
தேடலில்
தொலைந்து போன
சொந்த பந்த
பாசங்கள்
மீட்டுக்கொள்ள
முடியாத
மிகப் பெரிய
சோகங்கள்
நம் வாழ்க்கையில்.....!

சம்பாதிக்க
சம்பாதிக்க
என்று....அலைந்து
திரும்பி
வலித்தாலும்
வலியோடு
கட்டாயத்
தூக்கம்
கேட்டு.....நிறைவேறாமல்
போகும்
நாட்கள் என்
முன்னே ஏராளம்.......!

நினைத்த
வாழ்க்கையை
வாழ்வதிற்குள்
நினைத்துப்
பார்க்கமுடியாத
நேரெதிர்
மாற்றங்கள்
வாழ்நாளில்
நீளும்
ஏமாற்றங்கள்......!!

ஊரு விட்டு
நாடுவிட்டு வந்து
நாலுநாள்
தான் ஆச்சு.....ஆனாலும்
எனக்குள்ளே
என்னவோ
பெரும் மூச்சு.....என்
ஊர்க் காற்றுக்
கேட்டு......!!

இரண்டு பவுண்சுக்கு
போத்தல்
தண்ணி குடிச்சும்
தாகம்
தீரல.....என்
வீட்டுக்
கிணற்றில்
மொண்டு மொண்டு
குடிக்காததால்......!!

எழுதியவர் : thampu (6-Dec-14, 4:08 am)
பார்வை : 86

மேலே