அக்கா
அம்மா என்னை பத்து மாதம்
வயிறில் தான் சுமர்ந்தால்
அக்கா நீயோ நான் நடை பழகும் வரை
என்னை இடுப்பில் சுமர்ந்தாய்
எனக்கு நடை பழக கற்று கொடுத்து
தந்தையானாய்
உணவு உண்ணும் போது எனக்கு
ஊட்டி விட்டு தாயானாய்
நான் பள்ளிக்கு செல்லும் வயதில்
பாடம் கற்று கொடுத்து குருவானாய்
எனக்கு பத்து வயதானபிறகு
சிறந்த தோழியானாய்
அக்கா உன்னை என் வாழ்வில்
தாயாக தந்தையாக
குருவாக நல்ல தோழியாக
தான் பார்த்தேன்
ஆயினும் நீயோ என்னை நான் பிறந்த
அன்று முதல் இன்று வரை
உன் முதல் குழந்தையாக
மட்டுமே பார்த்தாய்