சிக்கிக்கொள்ளாத வரை சிங்கம்தான்

சினிமாவில்
சிகரம் தொட்டாய்!
ஆன்மிகத்தில்
ஞானம் பெற்றாய்!
சரி... எதைக் கற்றாய்?
அரசியலில் நுழைய
ஆசைப்படுகிறாய்?

நயமான வார்த்தைகள்
பேசினால்,
மக்கள் - நும் வசம்
ஆகிவிடுவார்கள் என்றா?
இல்லை,
வாய்ப்புகள் நும் வீட்டு
வாசற்கதவைத் தட்டுகிறது
என்கிற ஆசையா?

எப்படியிருந்தாலும்,
அனுபவம் இல்லாமல்
அரசியலுக்குள் நுழைந்து
அழிந்துபோனவர்கள்
ஆயிரம் பேர்!
ஆயிரத்தொண்ணாவது நபராக
அது உன்னை
வரவேற்கக் காத்திருக்கிறது...

உன் ‘வாய்ஸா’ல்
வளர்ந்தவர்களே,
உனக்கு ‘வைரஸா’ய்
வரக் காத்திருக்கின்றனர்!

ஆகையால்,
அதில் - நீ
சிக்கிக்கொள்ளாத வரை
சிங்கம்தான்...
சிக்கிக்கொண்டால்
அசிங்கம்தான்...

கடவுள் வழிகாட்டினால்
கட்டாயம் அரசியலுக்கு வருவேன்
என்று சொல்லிச்சொல்லி
எம் மக்களுக்கு
காதுகுத்தியது போதும்...
படங்களில் ‘பஞ்ச்’
டயலாக் பேசிப்பேசி
பாதை மாற்றியது போதும்...

இனி ஏமாற மக்கள் இல்லை!
நீ - ஏமாற்ற கடவுள் இல்லை!!
பிழைத்துக்கொண்டோம்
உன் பேச்சிலிருந்து...
பிரிந்து சென்றோம்
உன் உயிரிலிருந்து!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (6-Dec-14, 3:42 pm)
பார்வை : 48

மேலே