என் வலி - 2

நீ சத்தமில்லாமல் என்னுள் வந்தது தெரியும்
ஏனோ நீ திரும்பி சென்றது மட்டும் எனக்கு தெரியவில்லை !

உனக்காக எதையும் இழக்க தயாராய் இருந்தேன்
ஆனால் நீ என்னை மட்டுமே இழக்க நினைக்கிறாய் !

உனக்காக எத்தனை ஜென்மமும் காத்திருப்பேன் !
நீ ஒரு நொடியாவது என்னுடன் பேசிவிடு

நான் உன்னை உயிராக நினைக்கிறேன்
நீ என்னை சிறு துரும்பாக கூட நினைக்கவில்லை!

நீ கடைசிவரை என்னுள் வலியாக மட்டுமே இருக்கிறாய்
மரணத்தை ஒவ்வொரு நொடியும் எனக்கு காட்டினாய் !

எனக்குள் மாற்றத்தை தந்த நீ
இன்று ஏனோ ஏமாற்றத்தை மட்டுமே தருகிறாய் !

நீ என்னுடன் பேசிய வார்த்தைகள் என் இதயத்தில்பதித்தேன்
ஏனோ நான் பேசிய வார்த்தைகள் என் கல்லறையில் மட்டுமே பதித்தாய் !

உன்னை மறக்க நினைத்ததில்லை ஏனோ உணவும் , உணர்வும் ,
உறக்கம் , என் உறவும் கூட மறந்தேன் !

என்னுள் உறவாக மட்டுமே நினைத்தேன்
என்றும் உறவாட மட்டுமே நினைத்ததில்லை !

நீ என்றும் என் நிழல் மட்டுமா !!!

எழுதியவர் : (6-Dec-14, 2:25 pm)
Tanglish : en vali
பார்வை : 66

மேலே