மனதுக்குள் முனுமுனுக்கல்

மனதுக்குள் ஒரு முனுமுனுக்கல்

காலைத் தென்றலும்
இவ்வளவு இனிமையாக வீசவில்லை

குரலில் இனிமையான குயிலும்
இதமாக கூவவில்லை

நாட்டியப் பேரொளி மயிலும்
அழகாய் ஆடவில்லை

காற்றில் உதிரும் இலை கூட
அழகாக மண்ணில் வீழவில்லை

சிலைகளுக்கு உயிர் கொடுக்கும்
அழகும் அழகாக தோனவில்லை

புல் நுனி நனைக்கும் பனித்துளியும்
பசுமையாக செழிக்கவில்லை

உன் அருகில் இருக்கும் போது
அழகில்லாத உருவங்களும் மிகை அழகாக காட்சி அளிக்கின்றது
என் கண் முன்னே

மழலை போல வார்த்தைகள் இருந்து
பேச முடியாமல் தவிக்கிறேன்

ஆயிரம் பட்டாம் பூச்சியும் பறக்கவில்லை
ஆண் அழகன் உன் முன்னே

நீ எனதருகில் இருக்கும் ஒவ்வெரு வேளையெல்லாம்
எனக்கான புது உலகம் நீ என்று எண்ணத் தோனுகிறது

தூரத்தில் இருந்து என் காதலை
கண்களால் வளர்த்துக் கொள்கிறேன் ..


தொலைவில் இருந்து ரசிக்கும்
தொலைநோக்கியாக மாறுகிறேன்

உன்னை விட்டு சற்று ஒதுங்கி நிற்கும் பொழுதெல்லாம் ....

எழுதியவர் : keerthana (6-Dec-14, 8:55 pm)
பார்வை : 101

மேலே