என் கடைவிழிப் பார்வை

அன்பனே !
எத்தனை தடவைகள் -என்
இரு விழிகளும் உன்னை
புகைப்படம் எடுத்துள்ளது
அத்தனை தடவைகளும் நீ -என்
மனதில் பதிந்து போய் உள்ளாய்
உன்னை என் உள்ளத்தில் இருந்து என்னாலேயே
அழித்துக் கொள்ள முடியாதபோது உன்னால் எவ்வாறு முடியும்
என்னை விட்டு நீ விலகிச் சென்றாலும்
என் பார்வையில் இருந்து விலகிச் செல்ல இயலாது
கருவறையில் சேயை சுமக்கும் தாயைப் போல -உன்
காதலை என் கண்களில் சுமக்கிறேன் காலம் பூராகவும்
என் கடைவிழிப் பார்வை -உன்
கனவிலும் வந்து காதலிக்கும் -அது
உன் கல்லறையானாலும்