சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 16 ராமா நீயெட ப்ரேமரஹிதுலகு – ராகம் கரஹரப்ரியா

பல்லவி:

ராமா நீயெட ப்ரேமரஹிதுலகு
நாமருசி தெலுஸுநா ஓ ஸீ தா (ராமா)

அனுபல்லவி:

காமிநீ வேஸதா ரிகி ஸாத் வி நட த –
லேமைந தெ லுஸுநா ரீதி ஸீ தா (ராமா)

சரணம்:

தந ஸௌக்யமு தா நெறுக க யொருலகு
தகு போ த ந ஸுக மா
க நமகு புலி கோ ரூபமைதே
த்யாக ராஜநுத சிசுவு பாலு கல்கு நா (ராமா)

பொருளுரை:

ஓ ஸீதாராமா! உன்னிடம் (பக்தியென்னும்) அன்பு இல்லாதவர்க்கு நாம ஸங்கீர்த்தனத்தின் ருசி தெரியுமா?

பெண் வேடம் தாங்கி நடிப்பவனுக்குப் பதிவிரதையின் ஒழுக்கம் சிறிதேனும் தெரியுமா ஸீதாராமா?

(ஆத்மானுபவத்தால் ஏற்படும்) தன் சுகம் தனக்கே தெரியாமல் பிறருக்குச் செய்யும் போதனை பயனளிக்குமா? பயங்கரமான புலி பசு வேடம் பூண்டு வந்தால் அதனிடம் குழந்தைக்குப் பால் கிடைக்குமா ராமா?

குறிப்பு:

இப்பாடலை சென்னை கலாசேத்ராவில் இசை ஆசிரியராகப் பணி புரியும் முரளி அருமையாகப் பாடியிருக்கிறார். இதை யு ட்யூபில் கேட்கலாம்.

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடத்திய வள்ளி திருமண நாடகத்தைப் பார்க்க S.G.கிட்டப்பா வந்திருந்தாராம். அப்பொழுது தியாகராஜ பாகவதர் ‘ராமா நீ எட’ என்ற தியாகய்யர் கிருதியை கரகரப்ரியா ராகத்தில் பாடிக்கொண்டு மேடையில் பிரவேசித்தாராம். பாகவதர் அந்த கிருதியைக் கையாளும் விதம் கண்டு பிரமித்து ’பாகவதர்’ என்ற பட்டம் உனக்கு மிகவும் பொருந்தும் என்று கிட்டப்பா கூறினாராம்.

எழுதியவர் : டி.எஸ்.பார்த்தஸாரதி (7-Dec-14, 8:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 95

மேலே