இருக்கிறதை விட்டு , பறக்கிறதை நினைத்து
கண் மூடித்தனமான பாசம் வைத்த
இந்த மனசை என்ன செய்வது/
போகாதே என்ற இடத்திற்குப்
போகிறது, நினைக்காதே என்ற
நினைப்பையே திரும்ப, திரும்ப
நினைக்கிறது, வேண்டாம், மறந்து
விட வேண்டும் என்ற நினைவே
வந்து சுற்றிச் சுற்றிக் கொல்கிறது.
திரும்பியே பார்க்காத மனிதரையே
நினைத்து ஏங்குகிறது, நம்மை
மதித்து வரும் மனிதரைப் பார்த்து
முகம் திருப்பிக் கொள்கிறது
நடக்காத கனவுகளையே நினைந்து நினைந்து,
கற்பனை செய்கிறது, கலக்கம் கொள்கிறது.
பின் அவரிடத்தில் கோபம் கொள்கிறது,
அவர் பின் வந்தாலும் செய்தாலும் ஏற்க
முடிவதில்லை, அப்பவே ஏன் வரவில்லை
அப்பவே ஏன் தரவில்லை, இப்ப மட்டும்தான்
ஞாபகம் வருகிறதாக்கும், என்றெல்லாம்
அலை பாய்கிறது, எது கொடுத்தாலும்
போதவில்லையே அதற்கு... அதற்கும்
ஒரு சாடல், பின் எதற்கோ ஒரு தேடல்,
எது கிடைத்தாலும் அதற்கொரு குறை,
இருக்கிறதை விட்டு ., பறக்கிறதை நினைத்து..