நானும் புள்ளி ராஜா - நாகூர் கவி
முதன் முதலாக எழுத்து தளத்தில் பத்தாயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளேன் என்ற நற்செய்தியினை இன்று எனது சுய விவரப் பகுதியில் பார்த்தேன்...!
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் பத்தாயிரம் புள்ளிகளை சிலர்தான் இத்தளத்தில் கடந்துள்ளார்கள். அதில் எனது பெயரும் இடம்பெற்றதைக் கண்டு அளவில்லா ஆனந்தம் கொண்டேன்...
எனது பதிவுகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய எழுத்து தளத்திற்கும், தவறாமல் எனது பதிவுகளைப் படித்து, ரசித்து, தொடர் கருத்துக்களால் இதுநாள் வரை என்னை ஊக்குவித்து வரும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ் பித்தர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் எனது முதுகெலும்பாக எப்போதுமிருக்கும் தீவிர ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை சொல்லி அகம் மகிழ்கின்றேன்...!
இந்த புள்ளிகளைப் பெற்றிட காரணமாயிருந்த உங்களிடமே இந்த வெற்றியினை சமர்ப்பிக்கிறேன்....!

