TEA மனிதர்

"மனிதரு வன்டாரு"

காதலர் கைபேசிக்கு
காலாண்டு விடுமுறை தரும்
தேர்வுநேர திருவிழாவில்
குறிஞ்சி,ஆம்பல் குடில்களின்
கதவோரம் கைதட்டும்
HAIKU தாயின்
வட்டார
மொழிக்குழந்தை..

மூன்று ரோஜாவோ(3 ROSES)
என
முற்களும் தேடியதில்லை...
தாஜ்மஹாலோ
என்று
தடயமும் பார்த்ததில்லை...
தேயிலை தாயின்
திடமில்லா தாய்பாலில்
எங்கள் இரவுகளும்
இனிக்கத்தான் செய்தன...

பத்திற்கும் பதினொன்றுக்கும்
இருக்கும் இடைவெளியில்
"TEA மனிதர்"
வரும் நேரம்
என வெளிக்காட்ட
கடிகாரத்திடமும் தான்
கால்ஷீட் கேட்டோம்

ஆணாய் பிறந்ததின்
பயன்களின் ஜனத்தொகையில்
புதியதாய் ஒன்றாக
அவரன்பு TEA குடிக்கும்
அரும்பெருமையையும்
சேர்த்துக்கொண்டோம்...

நீட்டிய சில்லறையின்
மொத்தத்தை கூட
எங்கள் வார்த்தையின்
நேர்மையில் எண்ணிக்கொண்டார்...

அவரைப் பற்றி அறிந்திருக்க ஒன்றில்லை...

என்றாலும் அவரை
நேசிக்கும்
உள்ளங்கள் ஒன்றிரண்டில்
எங்களையும் சேர்த்துக்கொண்டோம்...
கடின தேர்வுகளும்
அவர் தேயிலை சூட்டில்
தெருமறந்து போனதுண்டு...

உணவு வேளைகள்
மூன்று எனவகுத்து,
எங்கள்,
இரவுவேளை பசிமறந்த
அறிஞர்கள் வரிசையில்
எங்கள் பசியுணர்ந்து
நடுநிசிக்கு நொறுக்குகளை
பொட்டலத்தில் கட்டிவரும்
அவருக்கும் ஓர்
நாற்காலி ஒதுக்கலாம்..

SEMESTER இரவுகளின் இருட்டிற்கு
சாயம் பூசிவிட்டு
ஓவியர் பட்டம்
வாங்க மறுத்து
ஓராமாய்
ஒதுங்கி நிற்கும்
அவரையும் அழைக்கலாம்
மற்றொரு
PABLO PICASSO வென...

ஓர் ரயில் பயண சிநேகிதனாய்
நான்காண்டு பயணத்தில்
நடையிட்டு நகரும் அவரை
என் நினைவுச்சோலையில்
ஓர்
மரமாய் நட்டுவைக்கிறேன்...
CEG நினைக்கையிலே உதிரும்
கண்ணீர்துளிகளுள் சில
அம்மரத்திலும்
ஆடிவிட்டு போகும்
எனும் ஆசையுடன்...- JK

எழுதியவர் : (7-Dec-14, 3:31 pm)
பார்வை : 284

மேலே