மதிப்புமிகு நண்பருக்கு

தமிழரெனும்
சாயம் பூசி
இனத் துரோகிகளை
தலையில் வைத்தாடும்
தன்னலமிக்க
மனித குல
மணிக்கமே...

உலக நாயகனை விட
பலப் பாத்திரங்களில்
நடைபோடும்
நகல்களின்
புனைப்பெயரே..

உன் பெருமையை
உலகறிய வேண்டுமென்றே
உதடுகள் துடிக்கிறது...

இத்துடன் அத்தனையும்
நிறுத்தி விடு
உன் தவறுகளை
திருத்தி விடு...

எழுதியவர் : கோபி (7-Dec-14, 2:39 pm)
பார்வை : 184

மேலே