கையளவு இதயம் துடிப்பது உனக்காக 555

என்னவளே...

நான் தினந்தோறும்
பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்...

தனிமையில்
என் நிழலுடன்...

என்னுடன் இருப்பது
நீதானே...

கையளவு மட்டும் இருக்கும்
என் இதயத்தில்...

உன் நினைவுகள்
மட்டும் எப்படி...

என்னில் முழுவதும்
வளர்ந்தது எப்படி...

தினம் தினம் சாலையோரம்
காத்திருக்கும் என்னை...

உன் விழிகளை உயர்த்தியோ
கடை கண்ணாலோ பார்த்ததில்லை...

என் விழிகள் மட்டும்
உன்னை காணும்வரை...

எட்டு திசை எங்கும்
அலைந்துகொண்டுதான் இருக்கிறது...

என்னை நீ கடந்து
போன பின்பும்...

உன் பார்வைக்காக
என் விழிகளும்...

கையளவு இதயமும்
உனக்காகவே ஏங்கி
கொண்டு இருக்கிறது...

வருவாயோ என் வாழ்வில்...

என் விழிகளில்
ஒளியாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Dec-14, 8:02 pm)
பார்வை : 520

மேலே