காயத்தின் அகராதி
அதிகமாக உன்னை நேசித்து
அசதியாக தூங்கியதால் -எனை
அகதியாக விட்டுச் சென்றாயா ?
ஆணி வேரும் ஆடி போய்விட்டது
ஆடவன் எனை தழுவிச் சென்றதால்
ஆதாலால் தானே அனைத்தும் இழந்து
ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் அலைகிறேன்
இதயம் திறந்து -என்னை உனக்குள்
இடம் மாற்றியதால் -உதிரும்
இலை போல சுருண்டு விழுந்தேன் -ஊரார்
இகழ்ச்சியால் இறந்தும் போனேன்
ஈர விழிகள் இதயம் நனைக்க
ஈக்கள் மொய்ப்பது போல -உன் நினைப்பு
ஈர் உயிர் பிரிவை போல கொல்லுகிறது
உனக்காக பிறந்ததால் தான்
உலகம் மறந்தேன்
உயிரைத் தொலைத்தேன் -என்
உருவமும் மறந்தேன்
ஊழல் போல காதலை உதறிச் சென்றாய்
ஊசல் போல என் மனதை தடுமாற்றினாய் -உன்னால்
ஊஞ்சலில் ஆடுகிறேன் தனிமையை தனியாக உணர்ந்து
ஊசி போல உன் முகம் பார்க்கும் வேளையில் வேதனை தருகிறாய்
எடுபிடி கண்களாக காதலுக்கு உதவியே
எட்டாக்கனியாக கை நழுவிச் சென்றது
எறும்பு போல சிறிய காதலும் -துரும்பாய்
எனை இளைக்க செய்தது
ஏணிப் படியாக காதலும் எனை கீழே இறக்கி சென்றது
ஏதோ நினைப்பால் நினைவுகளையும் பறித்து திண்றது
ஏட்டிலே எழுதியது போல என் மனதில் உன் பெயர் -இன்று
ஏறுவரிசை போல ஏற்றம் கொண்டது உள்ளத்திலே
ஒன்றாய் இதயம் மட்டுமே -உன் மனமோ
ஒதுங்கிப் போய்
ஒளிந்து கொள்கிறது
ஒதுக்கு புறமாக விழிகளின் அருகே
ஓரமாக ஒதுக்கினாலும்
ஓர விழிப் பார்வை மட்டும்-எனை
ஓரங்கட்டும் உன் பக்கம்
அல்லும் பகலும்
ஆனந்தம்
இடை இடையே
ஓர் பூகம்பம்
காதல் என்று சொல்லுவதை விட
காயம் என்று சொல்வது தான் இனிக்குது
காயம் பட்ட இதயம் என்பதால் .............