அவள் என்ன செய்வாள்

விழித்திரை
விரிசல் விட
தொடங்கியது ,

வெந்நீர் என் உடல்
முழுதும் ஊறி
தோல் உரிந்துகொண்டிருந்தது,

ரோமங்கள்
ஒவ்வொன்றாக
பிடுங்கப்பட்டது ,

இதய துடிப்பு
சற்று அதிகமானது ,

அறுபட்ட நரம்புகள்
என்னை
சிகப்பாகி கொண்டிருந்தது ,

மணமேடையில்
அவள் கண்கள்
ஏதாவது ஒரு மூலையில்
நான் இருப்பேனா என்று
தேடிகொண்டிருந்தது.

எழுதியவர் : ரிச்சர்ட் (9-Dec-14, 10:29 am)
Tanglish : aval yenna cheyval
பார்வை : 314

மேலே