பயணிகளின் கனிவான கவனத்திற்கு
![](https://eluthu.com/images/loading.gif)
பயணிகளின் கனிவான கவனத்திற்கு
-----------------------------------------------------------
தாங்கள் ஏறியுள்ள
காதல் என்னும்
பேருந்து சீராக
செல்ல வேண்டுமென்றால்,
முன் இருக்கையில்
அமர்ந்தால்
உன் காதலி
சகஜமாக இருக்கமாட்டாள் ,
கடைசி இருக்கையில்
அமர்ந்தால்
அவள் சுகந்திரம்
பறிபோகும் ,
நடு இருக்கையில்
அமர்ந்தால்
அவள் திருப்த்தி அடைவாள் ,
முன் இருக்கை - காதலை உன்னிடம்
அதிகமாய் எதிர்பார்ப்பாள்,
கடைசி இருக்கை - அவள் சுதந்திரத்தில்
உன் தலையீடு அதிகமாயிருக்கும்,
நடு இருக்கை - நீ அவளுக்காக விட்டுகொடுப்பது
அவள் உனக்காக விட்டுகொடுப்பது ,
இவ்வாறு அமைந்தால்
பயணம் இனிதாக
அமையும் ..
இப்படிக்கு ,
இந்த பயணத்தை
சரியாக பயணிக்காமல்
பெரும் விபத்தில் சிக்கி
மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வரும் தாங்கள் போல்
சக பயணி .,.,.,.,.