செய்ந்நன்றி யறிதல் 7 - நேரிசை வெண்பா
வேண்டும் உனது இடுக்கண் களைந்தவரைத்
தூண்டும் நமதுநட்பு கன்னியப்பா - யாண்டும்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. 11:7
கருத்துரை:
நல்லோர், தமக்கு ஏற்பட்ட துன்பத்தை உதவி செய்து நீக்கினவரது நட்பை, வினையால் வரும் எழுவகைப் பிறப்பின் ஏழு தலைமுறைகளிலும் மறவாது நினைவில் வைத்திருப்பர். அதுபோல, ஒருவன் தனக்கு நேர்ந்த பெருந்துன்பம் நீங்குவதற்குத் துணையாக இருந்தவரின் நட்பைப் பேணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.