புது வரவில் கலப்படம்

இரு உள்ளங்கள் இனங்கியதால்
பல உள்ளங்கள் முரண்பட்டு
கண்ட தீர்வின் பயனாய்
சொர்க்கத்து முடிவு
அங்கீகாரப்பட்டு இணைந்து
இயற்கையின் நியதியாகி
இன்று புது வரவுக்காய்
பரவசப் பயத்துடன்
பல உள்ளங்கள்
அந்தப் புது உயிரை
எதிர் பார்த்திருக்கின்றன!!

தாய்மையாகிப் போன
அந்த இளம் மங்கையவள்
உள்ளத்தில் பல எண்ணங்கள்
என் பிள்ளை ஆணா? ​பெண்ணா?
அழகு காட்டுமா?
சிரிக்குமா ?அழுமா?
பேர் என்ன சூட்டலாம்
பயம் கலந்த எதிர்பார்ப்புக்கள்!!

தந்தை இவன் எண்ணம்!!
அவள் மேல் காதலினால்
அச்சம் பதற்றம்
சுகப் பிரசவம் வேண்டும்
வேண்டுவான் இறையிடத்தில்
உடன் தன் பிள்ளை
எதிர் கால வாழ்வுக்காய்
திட்டமிடலும் சேர்ந்திருக்கும்

கோடான கோடி ஜீவன்கள்
இம்மண்ணில் தோன்றுகையில்
தொடர்ந்திருக்கும் இந்நிலையும்
அன்பு பாசம் நிலைத்திருக்கும்
இதுவரைக்கும் மட்டும் ஏனோ
தெரியவில்லை புரியவில்லை
சண்டைகளும் சச்சரவுகளும்
உறவுக்குள் தொடர்ந்திருக்கும்
ஏன் மறைந்து மறந்து போனது
அன்பும் பாசமும்
சூழல் மாற்றம்!!
மாசடைந்த வளியும் நீரும் காற்றும்!!
இவனுடலில் கலந்ததாலா?

இல்லை மாசடைந்த
சமூகமும் உள்ளங்களும்
இவன் எண்ணத்தில் கலந்ததாலா?
புரியவில்லை!
புது வரவில் கலப்படம்
பொய் பொறாமைக் கழிவுகள் கலந்து
ஒவ்வாமைக்கு உட்பட்டு
உலகம் பிணி சேர்ந்த உடலாய்
நிற்கிறது பாவம்!!!!!!

யார் துணிவார் இந்நிலை மாற்ற!
யார் வருவார் !
தருவார் இந் நோய்க்கு மருந்ததனை
புது வரவுகள் தொற்றாதிருக்க
ஔியாய்! ஒலியாய்!
வந்துதித்து
ஒழித்திட வேண்டும்
இந் நோய்க் காவிகளை
புது உள்ளங்கள் பெற்றிட வேண்டும்
ஔியான நல் மருந்துகளை!!!!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (9-Dec-14, 8:16 am)
பார்வை : 71

மேலே