இறப்பும் சிறப்புதான்

கதியற்றவள் என்று பழி தூற்றும்
()()()()மன்பதை முன்னே -எனை
அனுசரித்து நெருங்கி வந்தாயே
()()()()சூது இல்லா உன் மனதால்
அந்திப் பொழுதும் தென்றல் காற்றும்
()()()()இரகசியம் பேசுவதைப் போல
அகம் குளிர்ந்தேன்
போதையான பார்வையால் -எனை
()()()()()அருந்தி -அலவன் போல
எனை சுற்றி வந்தாயே
தளிர் விடும் அரும்பாய்
()()()()()உன் அருகே அகமுடையாள் போல
அருகில் நின்றேன்
அகநகை கொள்ளும் அகிலம்
()()()()()வாழ் உயிர்கள் மத்தியில்
அகந்தையாக இன்று
()()()()()அகவிதழ் போல பூத்து நிற்கிறேன்
இக்கணமே மடிந்து போ என்று உரைத்தாலும்
()()()()()களிப்படைந்து மனமாற
மடிந்து போவேன் இவ் அகிலத்தில்
எனக்காக கண்ணீர் சிந்த -என்
()()()()வேந்தன் உள்ளான் என்று
இறப்பையும் சிறப்பாக எண்ணி .....