காதல் வேள்வி

"காதல் வேள்வி "

காதலன் - காதலில், உனக்காக காத்திருப்பேன் நான் அன்பே !

காதலி - காதல் இல்(லை) எனினும் உனக்காக காத்திருப்பேன் அன்பே !.

காதலன் - கண்ணிமையே, உன் கண்களுக்கு கவிகூட்டுதென்றேன் , கவியில்

காதலி - கண் ணின் மையே,காதலா உன் கவி வரிகளுக்கு காரணம், வேறில்லை.


காதலன் - வரந்தருவேன் வா , என்போல் ஓர் உயிரினை உனக்கு, பெரும் வரமாய்

காதலி - வர தருவேன் வா , எண்ணம்போல் எனையே உனக்கு அரும் வரமாய் .

காதலன் - நீரில்லா மீன்போல துடித்தேன் தினம் நான் அங்கு

காதலி -நீர் இல்லா என்னிலையும் அஃதே தான் இங்கு, மாற்றமில்லை .

காதலன் - சரித்திரம் போற்றசெய்வேன் , அன்பே நம் காதலினை காவியமாய்

காதலி - சரி திறம் அறிந்தே கண்ணா, நம் காதலை மனதினில் பதித்திருக்கின்றேன் ஓவியமாய் .

காதலன் -நீர்நிலையாய் நான் இருப்பேன் , நீ குளிர என் நெஞ்சம் நிறைந்த அஞ்சுகமே !

காதலி- நீர் நிலையாய் இருக்க , எனை என்ன செய்யும் எவர் வஞ்சகமே ?.

காதலன் - தாமரை விழிகொண்டவளே ! உன் வரப்பார்வை தருவாயா ?

காதலி - தா மரையின் விழியாள் தான், ஆனால் தாவுகின்ற மானல்ல உன் மடிதவழும்
சிறு மான் நான், பார்வை வரம் கோருகிறாய்,எனையே அரும் வரமாய் தரத்தயார்
பெருவாயா?

காதலன் - தலைப்பு ஒன்று தெரிவிப்பாயா ? இப்பதிப்பும் நல் மதிப்பை பெருவதற்க்கு !

காதலி - தலை பூவை தந்தவனே , தருகின்றேன் தருகின்றேன் , கடுகளவும்
காதலில்லா வரிகளுக்கே இடும்பொழுது, இப்பதிப்பிற்கு என்ன குறை " "

எழுதியவர் : ஆசை அஜீத் (9-Dec-14, 6:02 pm)
Tanglish : kaadhal velvi
பார்வை : 107

மேலே