தயவு செய்து மனிதனாக

ஊழல் ....... ஊழல் ... எங்கும் ஊழல் ........

எதிலும் ஊழல் ....

ஏன் இப்படி போனது என் இனம் ....

மனித நேயம் மறந்து போன சில நரக மாமிசங்களால்

ஆம் அவர்களை மனிதர்கள் என்று சொல்வதால்

மனித இனத்திற்கே இழுக்கு என்று எண்ணுகின்றேன் ....

கடமையை செய்ய ஏழ்மையிடம் ஏமாற்றி பெரும்

இந்த ஊழல் பணம் ....

நீ இறந்தால் உன்னை எரிப்பதற்கு கூட உதவாது

அப்படியிக்க நீ இருக்கும் போதா உதவப்போகிறது ?

என எப்போது தான் நீ உணரப்போகிறாய் .... ?

நரக மாமிசமே ....

நீ மண்ணோடு போகையில் உன்னோடு ஒட்டியிருக்கும்

அரைஞான் கயிறையும் கூட வெட்டி எடுக்கும் ...

என்பதை எப்படி மறந்தாய் நீ ....

இதுவரை நீ இடுகாடே போனதே இல்லையா ?

இல்லை இனிமேலும் நீ இடுகாடு போக போவதேயில்லையா ...?

ஊர் வயிறெரிய நீ வாங்கும் அந்த ஊழல் பணம் ....

எப்படி உன் சந்ததி காக்கும் .....?

உன் ஆறாம் அறிவு கொண்டு ஊரை ஏய்த்தது போதும் ...

இனியேனும் அதை உன்னை மாற்றிட பயன்படுத்து ....

உன் இருண்ட பயணத்தை இதோடு நிறுத்து ....

உன் எஞ்சிய பயணத்தையாவது மனிதனாய் தொடர்ந்திடு ....

மிஞ்சிய பணத்தை எல்லாம் ஏழ்மைக்கு கொடுத்திடு ....

உன் வருங்கால சந்ததிக்கு வளமான அடித்தளம் அமைத்திடு ....

ஊழல் ஒழி ... உண்மையாய் உழை

புனிதனாய் வேண்டாம் ......

தயவு செய்து மனிதனாகவாவது மாறு ....

ஆம் பிறப்பால் மட்டுமே மனிதர்கள் மனிதர்கள் ஆவதில்லை

மனிதர்களாய் வாழ்வதில் தான் மனிதர்கள் ஆகிறார்கள் ...

எழுதியவர் : கலைச்சரண் (10-Dec-14, 1:07 pm)
பார்வை : 875

மேலே