அம்மா

நான் உன்னை திட்டி
கொஞ்ச தூரம் தள்ளிவந்தால்
உன் மனம் நோக கண்டேன்!
கேட்ட பொருளை
கேட்ட நேரத்தில்
வாங்கி தர முடியாமல் போக
என் மனம் வெதும்ப
உன் மனம் இயலாமையை நினைத்து
அழ கண்டேன்!
என்னால் முடியாமல் போனால்
உன் மடியில் கிடத்தி
தாலாட்ட கண்டேன்!
நான் உன் பின்னால்
ஓடிவந்தால் என்னை
தூக்கி வாரி
அணைக்க கண்டேன்!
அம்மா உன் சிந்தனை எல்லாம்
எப்பொழுதும் என்னைப்பற்றியே!
அம்மா நீ என்னை திட்டும் பொழுது
என் மனம் வலிக்கும் !
நீ என்னை திட்டினாயே
என்பதற்காக அல்ல!
என் அம்மாவை நான்
கவலைபடுத்தி விட்டேனே என்று.
என்னை பற்றிய
அக்கறை என்னை விட
உனக்கே அம்மா!
ஆயிரம் தோழிகளை
நான் கடந்து வந்தாலும்
நீ தான்-உன்னை
பற்றி நினைக்காமல்
என்னை பற்றியே
நினைத்திருக்கும்
என் உயிரை
தந்த தோழி!
இப்பிறவியே போதும்
எனக்கு இறைவா!
என் அன்னைக்கு
அடுத்த பிறவி
இருந்தால்!
நான் தாயாக
வேண்டும்
என் தாய்க்கு...
~பிரபாவதி வீரமுத்து