புதிய பாரதம்

உன்னை நினைத்தால்
நெஞ்சில் வலி ஏனோ?

உன்னைப் பார்க்க
கண்கள் ஏங்குவதேனோ?

உன்னைத் தொட்டணைக்க
கைகள் நினைப்பதேனோ?

உன்னை மடியில்
கிடத்தி தாலாட்டுவேனோ?

உன்னை ஒரு நொடியேனும்
நெஞ்சால் மறப்பேனோ?


உன் விரலைப்பற்றி
நான் நடப்பேனோ?

உன் வாயால் ஒரு வார்த்தை
என்னை 'அம்மா' என்று
அழைப்பாயோ?

புதிய பாரதம்
உருவாகட்டும் மகனே!
அதிலேனும் உன் தாயாக
உன்னைக் காத்து
உன் மடியிலேயே
உயிர் விடுவேன் மகனே!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Dec-14, 9:11 pm)
Tanglish : puthiya paaratham
பார்வை : 185

மேலே