வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க....பலதையும் ஆண்டு வாழ்க

நல்லதை நினைத்து வாழ்க..தீயதை விடுத்து வாழ்க

நன்மை புரிந்து வாழ்க..தீமையை ஒதிக்கி வாழ்க

இன்பமாய் வாழ்க....துன்பம் மறந்து வாழ்க

சிந்தனை வளர்த்து வாழ்க...சிகரம் தொட்டு வாழ்க

சிறப்பாய் வாழ்க....சிரித்து வாழ்க

அன்போடு வாழ்க....அறிவின் துணையோடு வாழ்க

ஆசையை சுமந்து வாழ்க...நிராசையை மறந்து வாழ்க

ஏமாற்றத்தை ஏற்று வாழ்க...வெற்றியை தேடிபிடித்து வாழ்க

நட்பை மதித்து வாழ்க ...உறவை நினைத்து வாழ்க

பெற்ரோரை சேர்த்து வாழ்க...இறை பத்தியுடன் வாழ்க

சாதிக்கும் துணிவுடன் வாழ்க...சாதனை பல புரிந்து வாழ்க

சோதனையை ஏற்று வாழ்க.....வேதனையை மறந்து வாழ்க

வாழ்க வளர்க நீடூளி வாழ்க எல்லோரின் இதயத்திலும்

நிலைத்து வாழ்க இன்று போல் என்றும் வாழ்க

என் அன்பான இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
அன்பு நண்பா..{ச.துரை....மண்டவம்} தோழி

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (10-Dec-14, 7:31 pm)
Tanglish : vaalthukkal
பார்வை : 131

மேலே