அமுத நிலவு

அடடா...! என்ன இனிமை;
குளிர் நிலவே உன் வருகை !
இன்ப இரவில் உன் ஒளிமை;
என்ன அதிசயப் பிரம்மை !

நட்சத்திர கூட்டத்து நடுவே
பொட்டு வச்ச வட்ட நிலவே !
தொட்டுப் பாக்க எனக்கு ஆசை
அது எட்டாக் கனியான பேராசை !

கருமேகம் உன்னை மறைத்தால்
அந்த நேரம் இங்கே இருட்டு….!
மாதம் ஒருநாள் உனக்கு விடுப்பு
அதற்கு அமாவாசை என்றுப் பேரு !

கவிஞனன் எவனுமே உன்னை கவி வடிப்பான்
அவன் கவிக்கு நீதான் உயிர் கொடுப்பாய் !
காதலர் யாவருமே உன்னை காதலிப்பார்
அவர் காதலுக்கு உன்னை சாட்சி வைப்பார் !

அறிவியல் ஆய்வுக் கூட்டம் - உன்னை
ஆழ்ந்துப் புகழ்ந்துப் போற்றும் !
நீ - பூமியில் காலடி வைத்தால் -உன்னை
பூஜை செய்து வணங்கும்….!

எல்லோருக்கும் உரிமையுள்ள நிலவே
நீ எப்போ பூமியிறங்கி வருவே…?
உன் நன்வரவை எதிர்நோக்கி
மண்ணுயிர்கள் ஏங்கி கிடக்கிங்கே !

நீ - கவிஞனின் பூர்வீக சொத்து
அவனுக்கு உன்மேல் மாபெரும் பித்து
அவனின் எண்ணிலடங்கா கவிதை
உன்னால் உருவானதே பெருமை !

நீ – செல்லக் குழந்தைகளின் நல்லக் குழந்தை
உன்னைக் காட்டி ஊட்டுவாள் அன்னை உணவை !
வெண்ணை நிறத்து வெண்மை உனக்கிருப்பது உண்மை
(மண்ணில் உனக்கென பண்மை எண்ணிலடங்கா தன்மை !)
மண்ணுக்கு நீ செய்யும் நன்மை கண்ணுக்கு தெரிந்த உண்மை !

எழுதியவர் : இரா.மணிமாறன் (10-Dec-14, 8:11 pm)
Tanglish : amutha nilavu
பார்வை : 71

மேலே