நீ மௌனம் கொள்ளும்வரையில்

ஒரு குழந்தையின்
உள்ளமென உனக்கு
இருக்கும் என நினைத்து
உன்னை நேசிக்க
நான் தொடங்கிய முதல் நொடி
என் காதல் ஜனிததடி

பூவை போன்ற பெண்ணுக்குள்
புயலும் இருக்குமென
பழகிய நாளடைவில்
அறிந்து கொண்டேன் உன்னால்தான்

ஒரு கவிதை சாயலும்
ஒரு புயலின் வேகமும்
நான் கண்டு ரசித்து நின்றேனடி

வாழ்வா சாவா
காதலில்
சொர்கமா நரகமா
உன் பதிலில்
இரண்டுமே ஒன்றுதான்
நீ மௌனம் கொள்ளும்வரையில்

எழுதியவர் : ருத்ரன் (11-Dec-14, 6:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 67

மேலே