இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தல் நாடகம்

கட்சியில் மாற்றங்கள்
கண்கட்டி வித்தைகள் ,
இலங்கையில் மீண்டும்
தேர்தல் நாடகம் ...
வால்பிடிக்கும் குரங்கிற்கும்
எலும்பு கவ்வும் நாயிக்கும்
இனாமாய் பொன்னாடை ,
இலங்கையில் மீண்டும் ஒரு
தேர்தல் நாடகம்...
வாய்கிழிய வாக்குறுதி
வானுயர கோஷங்கள்
வாசல் வாசலாய்
ஓட்டு வேட்டை ,
இலங்கையில் மீண்டும் ஓர்
தேர்தல் நாடகம்..
அந்த மானும் இந்த மானும்
அடிக்கடி ஆளும் கட்சி தேட
சொந்த மக்களை விழுங்கிய
நொந்த மான் மட்டும்
வெற்றிபெறும் பக்கம் பாய ,
இலங்கையில் மீண்டும் ஓர்
தேர்தல் நாடகம் ...
மகிழ்ந்த ராஜாவும்
மைத்திரி ராஜாவும்
மாறுவேடம் தரித்துக்கொண்டு
முட்டி மோதுவதாய் முழக்கமிட்டு
பூச்சாண்டி காட்டிட ,
இலங்கையில் மீண்டும் ஓர்
தேர்தல் நாடகம் ....
ஓட்டு வேட்டை முடிந்த பின்னே
புலி தேடும் வேட்டை ஆரம்பித்து
விரும்பிய தமிழனை சுட்டுத்தள்ள ,
இலங்கையில் மீண்டும் ஓர்
தேர்தல் நாடகம்.