நினைத்து கொண்டேன் காதல் சுயநலம்தான்


நிஜமாய் சொல் பெண்ணே

என் மீது உன்காதல் நிஜம்தானா

ஏனெனில்

அழகில்லை

கலரில்லை

அந்தஸ்தும் இல்லை

பேசி மயக்கும் திறனில்லை

என்னிடம் என்ன பிடிக்கும் என்றேன்

அதற்க்கு அவள்

நிஜம்தான் அழகில்லை உன்னிடம்

இந்த உணர்வு வேறு பெண்களை உனக்கு ரசிக்க தோணாது

நீ கலரில்லை உன்னையும் எந்த பெண்ணும் ரசிக்க மாட்டார்கள்

அந்தஸ்து அது தானாய் வரும்

நான் உன்னுடன் இருக்கையில்

இதை தவிர உன் நல்ல மனம்

வெளிப்படையான பேச்சு பிடிக்கும் என்றாள்

நினைத்து கொண்டேன் காதல் சுயநலம்தான் என்று

எழுதியவர் : rudhran (9-Apr-11, 7:53 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 720

மேலே