நினைவுகள்

பள்ளி எனும் பூந்தோட்டத்தில்
வண்ண வண்ண மலர்களாய்
நண்பர் கூட்டம்......
நிரந்தரம் இல்லை என்றபோதும்
உயிராய் பழகிய
இள நெஞ்சங்கள்
வீசப்பட்ட விதைகள் போல
ஆங்காங்கே வாழ்வைத்தேடி......
பள்ளி நாட்களை நினைக்கையிலே
விழியோரம் கண்ணீர் துளி.....
கண்ணீர் காய்ந்த போதும்
பசுமையாய் நினைவுகள்......

எழுதியவர் : தாரணி வேலாயுதம் (12-Dec-14, 1:09 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 252

மேலே