ஆயிரம் கனவுகள் கண்டேனடி

கயல் விழியே !
நீர் கோர்த்த உன் மீன் விழிகளில்தான்
உவமைக்கு பொருள் கண்டேனடி ....!
தேன் மொழியே !
சாயம் பூசிய உன் செவ்வாய் இதழில்தான்
நிசத்திற்கு பாடம் கற்றேனடி...!
கண்மணியே !
வெப்பக் காற்று உன் கூர் நாசியில் தான்
உயிர்மெய் நேசிக்கக் கண்டேனடி...!
பொன்மணியே !
வானவில் வடிவம் உன் மெலிய புருவத்தில்தான்
உன் கேள்விக்கு பதில் கண்டேனடி ...!
மான் விழியே !
காதல் கதை பேசும் உன் செவ்வரி விழிகளில் தான்
என் வாழ்க்கைக்கு அர்த்தம் கண்டேனடி...!
சுடர்கொடியே !
மவுனம் சம்மதம் என உன் இமைத் துடிப்பில்
ஆயிரம் வண்ணக் கனவுகள் நிசமாக்குதடி ...!