என் கல்லறையில் வந்துபார் 555

பெண்ணே...

உன் நிழலை போல உன்னையே
தினம் நான் சுத்தி வந்ததும்...

என்னை நீ தினம்
திட்டி செல்வதும் உண்மைதான்...

உன் தோழிகள் உணர்ந்த
என்கதலை கூட...

நீ உணரவில்லையா...

இல்லை உணராதவள்
போல் இருக்கிறாயா...

என்னை நீ வெறுப்பது
எவ்வளவு நிஜமோ...

நான் உன்னை நேசிப்பதும்
நிஜம்தானடி...

என் வாழ்க்கை என்னும்
வெற்று காகிதங்கள்...

உனக்காக காத்திருகிறது
நீ முகவரி எழுதுவாய் என்று...

முதல் பக்கத்தை
பார்க்காமலே...

இறுதி பக்கத்தில்
கையெழுத்து இடுகிறாய்...

என் காதல் உனக்கு
நிஜமென்று தோன்றினால்...

வந்துப்பார் என்
கல்லறையில்...

இல்லை என்னை
எரித்த சாம்பலில்...

அதிலும் இருக்குமடி...

என் காதலும் ஓவியமாக
உன் முகமும்.....

எழுதியவர் : முதல்பூ பே.மணி (12-Dec-14, 7:14 pm)
பார்வை : 518

மேலே